மக்கள் கூட்டத்தை நோக்கி சரமாரியான துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

மக்கள் கூட்டத்தை நோக்கி சரமாரியான துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

நியூயோர்க்கின் ரொசெஸ்ரர் (Rochester) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது

இந்த துப்பாக்கிச்சூடு மக்கள் கூடியிருந்த பகுதியொன்றில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இருவர் பலியாகியுள்ளதுடன் 13 பேர்வரை காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் முழுமையான பாதிப்பு குறித்த தகவலை பொலிஸார் இன்னும் உறுதியாக வெளிப்படுத்தவில்லை என சர்வதேச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.