பதுளை மாவட்ட தரவுகள் கணினி மயப்படுத்தப்படவுள்ளது!
பதுளை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளின் ஒட்டுமொத்த முழுமையான புள்ளி விபரங்கள் புதிய தொழில்நுட்பங்களின் அடிப்படையில் கணனி மயப்படுத்தப்படவுள்ளது.
பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் தமயந்தி பரணகம இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், மாவட்டத்தின் பிரதேச செயலகங்கள் தோறும் இந் நடைமுறை பின்பற்றப்படவுள்ளன.
பிரதேசசெயலகப் பிரிவுகளின் மக்கள் தொகை, அவர்கள் ஒவ்வொருவரின் வறுமானம், சொத்து விபரங்கள், தங்கி வாழ்பவர்கள், உழைப்பாளர்கள், மாணவர்கள், க.பொ.த. சாதாரணதரம், உயர்தரம், பட்டதாரிகள் ஆகிய விடயங்களின் முழுமையான புள்ளி விபரங்கள், சொந்தவீடு, வாடகைவீடு, உட்கட்டமைப்பு வசதிகள், பொதுவசதிகள் ஆகியன குறித்தும் விபரங்கள் சேகரிக்கப்படவுள்ளன.
பகுதி கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் மேற்படி புள்ளி விபரங்களைத் திரட்ட ஆரம்பித்துள்ளனர்.