ஒரே ரீசார்ஜ்ல 15 ஓடிடி, 1000+லைவ் டிவி, யூடியூப் பிரீமியம்: ஜியோவின் புதிய 'ரூ.200 ஓடிடி பாஸ்' அறிமுகம்

ஒரே ரீசார்ஜ்ல 15 ஓடிடி, 1000+லைவ் டிவி, யூடியூப் பிரீமியம்: ஜியோவின் புதிய 'ரூ.200 ஓடிடி பாஸ்' அறிமுகம்

வாடிக்கையாளர்களின் பொழுதுபோக்குத் தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ‘ரூ.200 ஜியோ ஓடிடி பாஸ்’ என்ற புதிய ஆல்-இன்-ஒன் கூடுதல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, வாடிக்கையாளர்களின் பொழுதுபோக்குத் தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில், ரூ.200 ஜியோ ஓ.டி.டி பாஸ் என்ற புதிய திட்டத்தை இன்று (மே 27) அறிமுகப்படுத்தியுள்ளது. மொபைல் ரீசார்ஜ் மற்றும் ஓடிடி சந்தாக்களை தனித்தனியாக எடுத்து பணம் செலவழிப்பதைத் தவிர்க்கும் நோக்கில் இந்த ஆல்-இன்-ஒன் பொழுதுபோக்கு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மாதம் சுமார் ரூ.1,500 மதிப்புள்ள ஓடிடி மற்றும் டேட்டா பலன்களை, வெறும் ரூ.200 விலையில் ஜியோ வழங்குகிறது.

இந்த ஓடிடி பாஸ் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 15 முன்னணி ஓடிடி தளங்களின் சந்தாக்கள் கிடைக்கின்றன. இதில் முக்கியமாக, விளம்பரங்கள் இல்லாத வீடியோக்கள், பேக்கிரவுண்ட் ப்ளே மற்றும் ஆஃப்லைன் டவுன்லோடு பலன்களைத் தரும் 'யூடியூப் பிரீமியம்' சந்தா சேர்க்கப்பட்டுள்ளது. இது தவிர இந்த திட்டத்தில் கிடைக்கும் மற்ற முக்கிய ஓடிடி தளங்கள்;

ஜியோஹாட்ஸ்டார் மொபைல் + ஹாலிவுட் (JioHotstar Mobile + Hollywood - நேரடி விளையாட்டு மற்றும் சர்வதேசத் திரைப்படங்கள்), பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் (Prime Video Mobile Edition), ஜியோ டிவி ஆப் மூலமாக அணுகக்கூடிய 12 ஓடிடி தளங்கள்- சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் ப்ளே (Lionsgate Play), டிஸ்கவரி+ (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), ஃபான்கோட் (FanCode), ஹோய்சோய் (Hoichoi), சௌபால் (Chaupal), பிளானட் மராத்தி (Planet Marathi), தரங் பிளஸ் (Tarang Plus), காஞ்சா லங்கா (Kanccha Lannka) மற்றும் டைம்ஸ் பிளே (TimesPlay).

ஓடிடி தளங்கள் மட்டுமின்றி, ஜியோடிவி ஆப் மூலம் 1,000-க்கும் மேற்பட்ட நேரடித் தொலைக்காட்சி (Live TV) சேனல்களை வாடிக்கையாளர்கள் பார்க்க முடியும். இதில் ஜியோஸ்டார் (JioStar), சோனி, சன் டிவி நெட்வொர்க், வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி மற்றும் இடிவி (ETV) போன்ற முன்னணி நெட்வொர்க்குகளின் 150-க்கும் மேற்பட்ட கட்டணச் சேனல்களும் (Paid Channels) அடங்கும்.

இத்திட்டத்தில் 30 ஜிபி  அதிவேக 4ஜி/5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா வசதியும் கிடைக்கும். இந்த ஓடிடி பாஸின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இது கூடுதல் பலன் தரும் (Add-on) திட்டமாகும். எனவே, இதில் வாய்ஸ் காலிங் மற்றும் எஸ்எம்எஸ் பலன்கள் இருக்காது. இதனைத் தொட்டிட வாடிக்கையாளர்களின் மொபைலில் ஏதேனும் ஒரு ஆக்டிவ் பேஸ் பிளான் இருப்பது அவசியமாகும்.

இந்த ரூ.200 ஜியோ ஓடிடி பாஸ் திட்டம் மே 27 முதல் இந்தியாவின் அனைத்து தொலைத்தொடர்பு வட்டாரங்களிலும் நேரலைக்கு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் மைஜியோ செயலி, Jio.com இணையதளம், சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பிற ரீசார்ஜ் செயலிகள் (gPay, PhonePe போன்றவை) மூலமாக இந்தத் திட்டத்தை எளிதாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.