அமெரிக்க விமானப்படை தளத்தை இலக்கு வைத்த ஈரான்

அமெரிக்க விமானப்படை தளத்தை இலக்கு வைத்த ஈரான்

தெற்கு ஈரானில் அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களுக்குப் பிறகு, அப்பகுதியில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் ஒன்றை தாம் இலக்கு வைத்துள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. 

அந்தத் தளம் எங்குள்ளது என்பதை அந்த பட​ைகுறிப்பிடவில்லை. இருப்பினும், அமெரிக்க தளம் ஒன்றைக் கொண்டுள்ள குவைத், தமது வான்பரப்பில் நுழைந்த "ஏவுகணை மற்றும் ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாகக் கூறியுள்ளது. 

ஈரான், குவைத்தை நோக்கி ஒரு அதிநவீன ஏவுகணையை ஏவியதாகவும், அதை குவைத் படைகள் வெற்றிகரமாக இடைமறித்ததாகவும் அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. 

ஆனால், அது தமது இராணுவத் தளத்தை நோக்கமாகக் கொண்டு வீசப்பட்டதா என்பதை அமெரிக்கா துல்லியமாகக் குறிப்பிடவில்லை. 

ஹோர்முஸ் நீரிணைக்கு மேலே பறந்த ஈரானிய ட்ரோன்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதோடு, தெற்கு ஈரானின் மூலோபாயத் துறைமுக நகரான பந்தர் அப்பாஸில் உள்ள ஒரு இராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே, ஈரானின் இந்த ஏவுகணை தாக்குதல் நிகழ்ந்துள்ளது. 

இந்த தாக்குதல்கள் மூலம் அமெரிக்க - ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் பலவீனமடைந்து வருவதாக கூறப்படுகின்றது.