மைக்கேல் ஜாக்சனின் பாடலுக்கு நடனம் ஆடிய ஷ்ரத்தா கபூர் | வைரல் வீடியோ
பாப் ராக் ஸ்டார் மைக்கேலின் ‘பேட்’ பாடலுக்கு நடனமாடிய நடிகை ஷ்ரத்தாவை நெட்டிசன்கள் கிண்டலாக கமெண்ட் செய்தனர்.
பாப் உலகின் ராக் ஸ்டாராக இன்று வரை மக்கள் மனதில் வலம்வரும் மைக்கேல் ஜாக்சனின் மியூசிக்கல் டிராமா திரைப்படமான மைக்கேல், கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
இந்த படத்தின் புகழ்பெற்ற பாடலான தி வே யூ மேக் மீ ஃபீல் என்ற பாடலை, கேரளாவை சேர்ந்த பரத நாட்டிய நடனக்குழுவினர் இரண்டு வாரங்களுக்கு முன்பு ரீமேக் செய்து வலைதளத்தில் பதிவிட்டனர்.
இந்த பதிவிற்கு கமெண்ட் செய்த மைக்கேல் படத்தின் நாயகனான ஜாஃபர் ஜாக்சன், நடனக்குழுவை வெகுவாக பாராட்டி இருந்தார்.
இந்த நிலையில் தற்போது மைக்கேல் ஜாக்சனின் ‘பேட்’ என்ற பாடலுக்கு பாலிவுட் நடிகையான ஷரத்தா கபூர், குறும்புத்தனமான நடனம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.