நயினாதீவு கடலில் விழுந்து பாடசாலை அதிபர் உயிரிழந்துள்ளார்.
நயினாதீவு கடலில் விழுந்து பாடசாலை அதிபர் உயிரிழந்துள்ளார்.
நயினாதீவை சேர்ந்த, நயினாதீவு ஶ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியால அதிபரான நடராசா மயூரன் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அதிபரும் மற்றுமொரு ஆசிரியரும் , பயணிகள் படகினை தவறவிட்டமையால் , கடற்தொழிலாளி ஒருவரின் சிறு படகில் நயினாதீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி பயணித்துள்ளனர்.
அதன் போது, கடற்காற்று காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில், படகு கடலையில் அடிப்பட்டமையால் , படகில் இருந்து அதிபர் நிலை தடுமாறி கடலில் விழுந்துள்ளார்.
அதனை அடுத்து , உடனடியாக செயற்பட்ட படகோட்டி அதிபரை மீட்க முற்பட்ட நிலையில் , அவர் உயிரிழந்துள்ளார்.