போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 06 பேர்..!
கற்பிட்டி-பரமுனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதணை நடவடிக்கைகளின் போது 32 கிலோ கிராமிற்கும் அதிகமான கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடற்படையினர் மற்றும் காவற்துறை அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவ்வாறு கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட போதைப்பொருள் மேலதிக பரிசோதணைகளுக்காக கற்பிட்டி காவற்துறையினரிடம் கையளிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், எல்பிட்டிய பகுதியில் போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்த 06 பேர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.