குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற தாய்..! மட்டக்களப்பில் சம்பவம்..!
பிறந்து 40 நாட்கள் ஆன குழந்தை ஒன்று கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பில் சந்தேகத்தில் கைதான குழந்தையின் தாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த குழந்தையின் தாய் நேற்றைய தினம் மட்டகளப்பு நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு - வன்னியார் வீதியிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து குறித்த குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தாம் குழந்தையை கொலை செய்ததாக குழந்தையின் தாய் ஒப்புக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் 24 வயதுடைய குறித்த தாய் உளநல பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டகளப்பு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.