இணையத்தில் மோசடி..! பொது மக்களே அவதானம்
இணையத்தளம் வழியாக பறவைகளை விற்பனை செய்து வந்த ஒருவரை வனஜீவராசிகள் திணைக்களத்தின் அவசர தேடுதல் பிரிவின் அதிகாரிகள், மாத்தளையில் நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 6 கிளிகள், 6 கிளிக் குஞ்சிகள், மைனா, 3 மைனா குஞ்சிகள், 6 சிறிய இன கிளிகளை தாம் கைப்பற்றியதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு விலங்கியல் ஆர்வலர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் இன்று மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.