பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக புதிய வனப்பகுதிகள் அறிவிப்பு!

பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக புதிய வனப்பகுதிகள் அறிவிப்பு!

பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக 25 வனப்பகுதிகளை வர்த்தமானியில் அறிவிப்பதற்கு வன பாதுகாப்பு திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

அநுராதபுரம் மொனராகலை காலி மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் காணப்படும் வனப்பகுதிகள் இதில் பெயரிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 73 ஏக்கர் நிலப்பரப்புக்கும் அதிகளவான பகுதி இவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக  வன பாதுகாப்பு  திணைக்களத்தின்  பணிப்பாளர் நாயகம் வேரகொட தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் இரண்டுவார காலப்பகுதிக்குள் குறித்த வர்த்தமானி வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.