மேலுமொரு தொகுதி மஞ்சள் கைப்பற்றப்பட்டது!
சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சிலாபம் பகுதியை அண்மித்த கடல் வழியாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் 1000 கிலோ கிராம் அளவுடைய மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 33 ஆயிரம் கிலோகிராம் உலர் மஞ்சள் சுங்கத்திணைக்களத்தினரால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 7 லொறிகள் மற்றும் மூன்று கனரக வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.