நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி....!
நாட்டில் நேற்றைய தினம் 5 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 276 ஆக அதிகரித்துள்ளது
இறுதியாக தொற்றுறுதியானவர்கள், ஓமான், ஐக்கிய அரபு ராச்சியம், கட்டார் மற்றும் மடகஸ்காரில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொவிட் 19 தொற்றினால் பீடிக்கப்பட்டிருந்த மேலும் 22 பேர் நேற்று குணமடைந்தனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 43 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 220 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.