செம்மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்தது ஆசியாவின் அதிசயம்

செம்மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்தது ஆசியாவின் அதிசயம்

ஆசியாவின் அதிசயம் என வர்ணிக்கப்படும் கொழும்பு தாமரை கோபுரம் இன்று மாலை 6 மணிக்குப்பிறகு செம்மஞ்சள் நிறத்தில் ஒளிரவிடப்பட்டுள்ளது.

நோயாளிகள் பாதுகாப்பு தினத்தை குறிக்கும் வகையில் சுகாதார அமைச்சின் வளாகம் உட்பட நாட்டின் அனைத்து மருத்துவமனைகளிலும் இன்று செம்மஞ்சள் நிறத்தில் ஒளிரும் என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பினால் (WHO) ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17 நோயாளிகளின் பாதுகாப்பிற்கான சர்வதேச தினமாக 2019 இல் தனது 72 வது உச்சி மாநாட்டில் கொண்டாட முடிவு செய்துள்ளது.

அதன்படி, உலக சுகாதார அமைப்பின் 194 உறுப்பு நாடுகள் 2020 ஆம் ஆண்டில் இந்த நாளை இன்று உலக முன்னுரிமையாக நோயாளிகளின் பாதுகாப்போடு கொண்டாடுகின்றன.

நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்த அனைத்து நாடுகளும் சர்வதேச பங்காளிகளும் உலகளாவிய நடவடிக்கை மற்றும் கூட்டு நடவடிக்கை எடுக்க உலக சுகாதார அமைப்பு (WHO) அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

கொரோனா தொற்று நோயினால் உலகளாவிய பாதிப்பு காரணமாக, இந்த ஆண்டு நோயாளி பாதுகாப்பு தினத்தின் கருப்பொருள் "சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பு". என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.