இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,458 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,458 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,458 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் ஊடாக அந்நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 8,993 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி அதிகம் பாதிப்புக்கு உள்ளான நாடுகள் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரையில் 8,884 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ளனர். எவ்வாறாயினும், இந்தியாவில் இதுவரையில் கொரோனா தொற்றிலிருந்து ஒரு இலட்சத்து 54,330 பேர் பூரண குணமடைந்துள்ளதோடு, நூற்றுக்கு 50 சதவீதமானோர் குறித்த தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.