மன்கட் முறைக்கு ஆட்டமிழப்பு வழங்க வேண்டாம் – நடுவர்களுக்கு முரளிதரன் ஆலோசனை

மன்கட் முறைக்கு ஆட்டமிழப்பு வழங்க வேண்டாம் – நடுவர்களுக்கு முரளிதரன் ஆலோசனை

மன்கட் முறையில் துடுப்பாட்ட வீரர்களை பந்துவீச்சாளர்கள் ஆட்டமிழக்கச் செய்வது நன்றாக இருக்காது என்று முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஐ.பி.எல் தொடரின் ஆரம்ப காலத்தில் சி.எஸ்.கே அணியில் விளையாடினார். அதன்பின் பெங்களூரு அணியில் விளையாடிய அவர் தற்போது சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “பந்துவீச்சாளர்கள் துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்குவதில் நியாமற்ற தன்மை இருக்கக் கூடாது.

துடுப்பாட்ட வீரர்கள் முதலில் எச்சரிக்கை கொடுக்க வேண்டும். பந்துவீச்சாளர் அல்லது துடுப்பாட்ட வீரர்கள் தவறு செய்கிறார் என நடுவர் தீர்மானித்தால், தவறும் செய்யும் அணிக்கு 5 ஓட்டங்களை தண்டனையாக வழங்கலாம்” என்று தெரிவித்துள்ளது.

பஞ்சாப் அணியின் தலைவராக ரவிச்சந்திரன் அஸ்வின் இருந்த போது மன்கட் முறையில் அவர் பேட்ஸ்மேனை அவுட்டாக்கியது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

ஆனால் கிரிக்கெட்டில் மன்கட் விதிகளுக்கு உட்பட்டது, அதில் எந்த தவறும் இல்லை. நடப்பு ஐ.பி.எல் தொடரிலும் மான்கட் முறையில் நான் துடுப்பாட்ட வீரர்களை அவுட் செய்வேன் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் அஸ்வின் டெல்லி அணிக்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.