தேசிய கல்வி கொள்கையால் இருமொழிக் கொள்கைக்கு ஆபத்து – மு.க.ஸ்டாலின்

தேசிய கல்வி கொள்கையால் இருமொழிக் கொள்கைக்கு ஆபத்து – மு.க.ஸ்டாலின்

தேசிய கல்வி கொள்கையால் அண்ணா வகுத்த இருமொழிக் கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எனவே, அனைவரும் ஒன்றிணைந்து அதை எதிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கேள்வி நேரத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், தமிழகத்தில் இருமொழிக் கொள்கைக்கு தீர்மானம் கொண்டு வந்தது மட்டுமில்லாமல் மாநில சுயாட்சியை வலியுறுத்தியும் தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் மாற்றம் கொண்டுவந்தும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியவர் அண்ணாவே என தெரிவித்துள்ளார்.

அண்ணா வகுத்து தந்த இரு மொழிக் கொள்கைக்கு ஆபத்து உருவாகி உள்ளதாகவும் அதை எதிர்க்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.