கொரோனாவில் இருந்து மக்களை காக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சுகாதாரத் துறையின் கணக்கும், சென்னை மாநகராட்சியின் கணக்கும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. 38 ஆயிரத்து 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 349 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் பாதிப்பு உச்சத்தில் உள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 398 ஆக அதிகரித்துள்ளது. 279 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே சென்னைக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு முறையாக, ஒழுங்காக அமல்படுத்தப்படவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சுகாதாரத் துறையின் கணக்கும், சென்னை மாநகராட்சியின் கணக்கும் ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருப்பதாக கூறியுள்ள ஸ்டாலின், கொரோனாவிலிருந்து மக்களைக் காக்க, அரசு கவனத்தை செலவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.