தமிழக சுகாதாரத்துறைச் செயலாளராக செயற்பட்ட பீலா ராஜேஷ் அதிரடியாக மாற்றம்!
தமிழக சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்துவந்த பீலா ராஜேஷ் பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசினால் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக இருக்கும் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ராதாகிருஷ்ணன் வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார்.
பீலா ராஜேஷ் வணிக வரித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்“ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.