இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 154 பேர் கொரோனாவால் பலி..!

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 154 பேர் கொரோனாவால் பலி..!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 154 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த காலப்பகுதியில் 34 ஆயிரத்து 167 பேருக்கு கொவிட் 19 தொற்றுதியாகியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று அதிகளவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நாடுகளின் பட்டியலில் உள்ள இந்தியாவில் இதுவரையில் 44 இலட்சத்து 62 ஆயிரத்து 965 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் அங்கு இந்த வைரஸ் தொற்று காரணமாக 75 ஆயிரத்து 91 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் இந்தியாவில் பாடசாலைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் 9 முதல் 12 ஆம் தரங்கள் வரையுள்ள மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச ரீதியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிகை 2 கோடியே 79 இலட்சத்து 98 ஆயிரத்து 460 ஆக அதிகரித்துள்ளது.

இந்த வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் உலகளவில் 9 இலட்சத்து 7 ஆயிரத்து 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும், 2 கோடியே 82 ஆயிரத்து 60 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.