கொரோனா பரவ ஆரம்பித்த நாளிலிருந்து ஏழை மக்களுக்கு உதவ அரசு முயற்சி செய்கிறது- பிரதமர்

கொரோனா பரவ ஆரம்பித்த நாளிலிருந்து ஏழை மக்களுக்கு உதவ அரசு முயற்சி செய்கிறது- பிரதமர்

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த முதல் நாளிலிருந்து வீதியோர வியாபாரிகள் உட்பட ஏழை மக்களுக்கு உதவ அரசு முயற்சி செய்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் சுயத்திட்டமிடல் திட்டத்தின் கீழ் பயனடைந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 வீதியோர வியாபாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) கலந்துரையாடினார்.

இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், “வியாபாரிகளுக்கான சுயத்திட்டமிடல் திட்டத்தின் மூலம் பயனடைய வியாபாரிகள் உரிய ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறுவதற்காக எந்த சேவை மையத்தையும் வியாபாரிகள் அணுகலாம். நகராட்சி அலுவலகங்கள் அல்லது வங்கிகள் மூலமும் வியாபாரிகள் இந்தத் திட்டத்தில் இணையலாம்.

இந்த திட்டத்தின் நோக்கமே வீதியோர வியாபாரிகள் எளிமையாக மூலதனத்திற்கான பணத்தை பெற வேண்டும் என்பதேயாகும். இந்த திட்டத்தில் இணைவதால் குறைந்த அளவிலான வட்டி விகிதத்தில் மூலாதாரத் தொகையைப் பெற முடியும்.

ஏழை நண்பர்கள் மற்றும் வீதியோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஊரடங்கின் முதல் நாளிலிருந்தே இத்தகைய நெருக்கடியிலிருந்து மீண்டுவரும் வகையில் அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

அந்தவகையில் வீதியோர வியாபாரிகளுக்கு உதவுவதற்காக ஜூன் முதலாம் திகதி முதல் ‘சுயத்திட்டமிடல்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.