பிரேமலாலினால் நாடாளுமன்றமே அமளிதுமளி
மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜெயசேகர இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதிவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க இன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் கறுப்புப்பட்டி அணிந்து வந்து எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பிரேமலால் ஜெயசேகர தொடர்பில் தமது அதிருப்திக் கருத்துக்களை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் நாடாளுமன்றமே அமளிதுமளியாக காணப்படுகின்றது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர் ஒருவரை இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்த பகுதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில், பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் கடந்த ஜுலை மாதம் 31ஆம் திகதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.