தமிழகத்தில் கொரோனா வைரஸின் வீரியம் அதிகமாகியுள்ளது – விஜயபாஸ்கர்
தமிழகத்தில் கொரோனா வைரஸின் வீரியம் அதிகமாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸின் தன்மை குறித்து கோவையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே, அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.
அறிகுறி இல்லாமல் கொரோனா உறுதியானவர்களிடம் இருந்துகூட நோய்த் தொற்று தற்போது பரவுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அறிகுறியுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளவர்களுக்கு தற்போது காய்ச்சல், உடல் வலி அதிகம் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம் அறிகுறியுடன் கொரோனா நோய் தாக்கியவர்களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தமிழகத்தில் சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசுதான் வெளியிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து தமிழகத்தில் மீண்டும் கடுமையான ஊரடங்கு நீட்டிப்பது குறித்து மருத்துவக் குழுவின் ஆலோசனைப்படி முதல்வர் முடிவெடுப்பார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.