மஹிந்தவின் உத்தரவு டிஜிட்டல் மயமாகியது கொழும்பு பங்குச் சந்தை

மஹிந்தவின் உத்தரவு டிஜிட்டல் மயமாகியது கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்பாடு நிறைவடைந்தமை குறித்து அறிவிக்கும் பொருட்டு பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவை சந்தித்துள்ளனர்.

ஒரு புதிய பரிணாமத்தில் உலகிற்கு வெளிப்படும் மூலோபாயத்தின் கீழ் பங்குச் சந்தையை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்பாடு பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கமைய செப்டம்பர் 17ஆம் திகதி முதல் பங்குச் சந்தையின் அனைத்து செயற்பாடுகளும் டிஜிட்டல் மயப்படுத்தப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக 52 நாட்கள் கொழும்பு பங்குச் சந்தையின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட போதிலும், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பங்குச் சந்தை செயற்பாடுகள் மூலம் புதிய தோற்றத்தில் உலக தரத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் விராஜ் தயாரத்ன மற்றும் பணிப்பாளர் நாயகம் சிந்தக மெண்டிஸ் ஆகியோர் பிரதமரை சந்தித்து தெரிவித்தனர்.

அதன்போது சர்வதேசத்துடன் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளும் போது போன்றே எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகளுடன் வசதியான மற்றும் செயற்திறன் மிக்க சேவையை கொழும்பு பங்குச் சந்தை ஊடாக வழங்குவதே அவர்களது நோக்கம் என்றும் தெரிவித்தனர்.

குறித்த சந்திப்பில் கலந்துக்கொண்ட பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் விராஜ் தயாரத்ன மற்றும் பணிப்பாளர் நாயகம் சிந்தக மெண்டிஸ் ஆகியோர் அத்தினத்திற்குரிய அழைப்பிதழை பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவிற்கு வழங்கினர்.