கணவர் தன்னை 'அதிகமாக நேசிக்கிறார்' - விவாகரத்து கோரிய பெண்
கணவர் தன்னுடன் தகராறு செய்யாமல், மிகுந்த பாசத்துடன் இருப்பதால், விவாகரத்து வழங்க கோரி மனைவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் திருமணமான 18 மாதங்களுக்குப் பிறகு தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரியுள்ளார். விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகிய அவர், கணவர், தன்னுடன் எந்த தகராறும் செய்யாததால், இந்த முடிவுக்கு வந்துள்ளதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து, மனைவி கூறுகையில், எனது கணவரின் அளவுக்கதிகமான அன்பை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. திருமணமாகி கடந்த 18 மாதங்களில் தனது கணவருடன் ஒருபோதும் தன்னுடன் சண்டையிடவில்லை என்றும், நான் செய்த தவறுகளை மன்னிப்பதுடன், சமையல் செய்வதற்கும், அனைத்து வீட்டு வேலைகளை செய்தவதற்கும் அவர் எனக்கு உதவி செய்கிறார்.
கணவருடன் சண்டை போட வேண்டும் என்ற என் ஆசை கூட என் வாழ்க்கையில் நிறைவேறவில்லை. நான் தவறு செய்யும் போதெல்லாம், அவர் என்னை மன்னிப்பார். எல்லாவற்றையும் ஒப்புக் கொள்ளும் அவருடன் வாழும் வாழ்க்கையை விரும்பவில்லை என்று அவர் கூறுகிறார்.
.இது குறித்து, அவரது கணவர் கூறும்போது, தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், என்றும் ஒரு சரியான கணவராக மட்டுமே இருக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார். இந்த வழக்கை திரும்பப் பெறுமாறு தனது மனைவியிடம் கூறு வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டார், அதைத் தொடர்ந்து நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்தது. மேலும் இருவரும் பேசி, பிரச்னைக்கு தீர்வு காணும்படி அறிவுறுத்தியது.