பதவி விலக தயாராகும் சோனியா காந்தி..?

பதவி விலக தயாராகும் சோனியா காந்தி..?

கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் தற்போது இடம்பெற்று வருகின்றது.

குறித்த சந்திப்பில் அவர் தமது முடிவை அறிவித்துள்ளதாக தெரிய வருகின்றது.

அத்துடன் புதிய தலைவர் ஒருவர் உடனடியாக தெரிவு செய்யப்பட வேண்டுமெனவும் அதற்கான காலக்கெடுவையும் அவர் வழங்கியுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் நிரந்தர தலைவர் ஒருவர் காங்கிரஸ் கட்சிக்கு தேவையாகவுள்ளதாக மத்திய குழு உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் ராகுல் காந்திக்கு தலைமை பதவி வழங்கப்பட வேண்டுமென ஒரு சில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.