மட்டக்களப்பில் குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

மட்டக்களப்பில் குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

மட்டக்களப்பு கல்குடா ரெயில் கடவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று மாலை மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற சரக்கு ரெயிலுடன் கன்ரர் ரக வாகனமொன்று மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கன்ரர் வாகனம் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து ரெயில்வே பாதுகாப்பு கடவையினையும் உடைத்துக் கொண்டு எதிரே வந்த ரெயிலுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது மட்டக்களப்பு சேத்துக்குடாவைச் சேர்ந்த செபஸ்ரியன் அருள்நாதன் வயது 48 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டடுள்ளதாகவும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.