இருநூறுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் Online ஊடாக பதிவு

இருநூறுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் Online ஊடாக பதிவு

ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் தகவல்களை இணையவழி முறையில் (Online Registration System) பெற்றுக்கொள்ளும் முறையொன்று பாராளுமன்ற செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டிருந்த நிலையில், 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தங்களது தகவல்களை வழங்கியுள்ளனர்.

அதன்படி, அனைத்து உறுப்பினர்களும் தமது தகவல்களை வழங்குவதற்கு பாராளுமன்றத்தின் இணையத்தளத்துக்கு பிரவேசித்து ஒன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூரணப்படுத்த முடியும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க அறிவித்தல் விடுத்திருந்தார்.

இந்த தகவல் வழங்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் எதிர்காலத்திலும் இதற்காக கால அவகாசம் வழங்கப்படும் என்று நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 11 ஆம் திகதி அலரி மாளிகையில் வைத்து கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர், அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக தயாரிக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பாராளுமன்ற செயலகத்தில் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.