தோல்வியடைந்த எம்.பிக்களின் பாதுகாப்பு நீக்கப்படுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை

தோல்வியடைந்த எம்.பிக்களின் பாதுகாப்பு நீக்கப்படுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை

இம்முறை பொதுத் தேர்தலி்ல் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை நீக்குவது குறித்து இதுவரை தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு தொடர்ந்தும் பாதுகாப்பை வழங்க வேண்டுமா இல்லையா என்பதை ஆராயாமல் அது தொடர்பாக தீர்மானிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

81 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை நீக்க தீர்மானித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு நான்கு பொலிஸார் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளதுடன் அமைச்சர்களுக்கு பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவருடன் 8 பொலிஸார் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளனர்.