முதலாவது அமைச்சரவை கூட்டத்திலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கவிருக்கும் கோட்டாபய அரசு?

முதலாவது அமைச்சரவை கூட்டத்திலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கவிருக்கும் கோட்டாபய அரசு?

அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டத்தில் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் சில ஷரத்துக்களில் திருத்தங்களை செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள 19வது அரசியலமைப்புத் திருது்தச் சட்டத்தில் சில ஷரத்துக்கள் சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் குறித்தும், அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரியவருகிறது.

புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டம் அமைச்சரவைக் கூட்டத்திற்கு மறு நாள் அதாவது எதிர்வரும் 20 ஆம் திகதி புதன் கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.