குற்றச் செய்திகள் தீபாவளி கொண்டாட்டத்தில் கொடூரம்! மதுபோதையில் ஏற்பட்ட தகராறு கொ***லையில் முடிந்தது – 27 வயது இளைஞர் உயிரிழப்பு!
இலங்கையில் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது மதுபோதையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலைச் சம்பவத்தில் முடிவடைந்துள்ளது. இந்தச் சம்பவம் மலையகப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதம்!
நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரே தோட்டம் புதுகாடு பிரிவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மதுபோதையில் இருந்த 29 வயதுடைய இளைஞருக்கும், 27 வயதுடைய மற்றுமொரு இளைஞருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தர்க்கம் முற்றிய நிலையில், 27 வயதுடைய இளைஞர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் பரபரப்பு!
கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்தவர் மரே தோட்டம் புதுகாடு பிரிவின் இலக்கம் 5 குடியிருப்புப் பகுதியில் வசித்த ஜெயக்குமார் செல்வகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அதே குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் நல்லதண்ணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணை!
உயிரிழந்தவரின் சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக நல்லதண்ணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தீபாவளிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது