விசாரணைகள் நிறைவு - வியாக்கியானம் விரைவில் ஜனாதிபதி, சபாநாயகருக்கு!

விசாரணைகள் நிறைவு - வியாக்கியானம் விரைவில் ஜனாதிபதி, சபாநாயகருக்கு!

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகளை உயர் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.

இது தொடர்பான தனது இரகசிய வியாக்கியானத்தை சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைப்பதாக நீதிமன்றம் இன்று (9) அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.