தெனியாய பகுதியில் 4 பேர் நீரில் மூழ்கி மாயம்!

தெனியாய பகுதியில் 4 பேர் நீரில் மூழ்கி மாயம்!

தெனியாய, பெவரலிய பகுதியில் உள்ள நீரோடையில் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

நுகேகொட பகுதியிலிருந்து சென்ற 7 பேர் கொண்ட குழுவினர், பெவரலிய பகுதியிலுள்ள நீரோடையில் நீராடிக் கொண்டிருந்த போதே அவர்களில் நால்வர் இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.