எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு:லி்ட்ரோ நிறுவனம்

எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு:லி்ட்ரோ நிறுவனம்

3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றி வரும் கப்பல் ஒன்று இன்று (18) நாட்டுக்கு வரவிருப்பதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

12.5 கிலோகிராம் நிறையுடைய ஒரு இலட்சம் உள்நாட்டு எரிவாயு கொள்கலன்கள் நேற்றையதினம் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

இன்று 85 ஆயிரம் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முழுமையான தீர்வு

இதேவேளை, சந்தையில் நிலவும் லிட்ரோ எரிவாயு தட்டுப்பாடு எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் முழுமையாகத் தீர்க்கப்படும் என அந்த நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.

எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு:லி்ட்ரோ நிறுவனம் | Litro Gas Shortage Ship Laughs Gas

மேலும், இந்த எரிவாயு வந்தடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த மூன்று நாட்களில் கூடுதலாக 350,000 வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை சந்தையில் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் நளிந்த குருகுலசூரிய இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், மூவாயிரத்து 500 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 24ஆம் திகதி கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் விளைவாக, தேவையற்ற முறையில் எரிவாயுவைப் பதுக்குவதைத் தவிர்க்குமாறு லிட்ரோ கேஸ் லங்கா நுகர்வோரை கேட்டுக்கொண்டுள்ளது.