மக்களே அவதானம்: நில்வள கங்கையில் இரு பகுதிகளில் வெள்ள அபாயம்

மக்களே அவதானம்: நில்வள கங்கையில் இரு பகுதிகளில் வெள்ள அபாயம்

நில்வள கங்கையின் தல்கஹகொட மற்றும் பனதுகம நீரளவீட்டு நிலையங்களில் சிறு வெள்ள நிலை பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று (18) நள்ளிரவு 12.30 மணியளவில் வெளியிடப்பட்ட நீர்மட்ட அறிக்கையின்படி, பனதுகம பகுதியில் நில்வள கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து 6.20 மீற்றராக பதிவாகியுள்ளது.

இதன் சிறு வெள்ள எச்சரிக்கை மட்டம் 6.00 மீற்றராகும்.

 

எச்சரிக்கை நிலை

அதேவேளை, தல்கஹகொட நீரளவீட்டு நிலையத்தில் நீர்மட்டம் 2.02 மீற்றராகப் பதிவாகியுள்ளதுடன், அங்கும் சிறு வெள்ள நிலை குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களே அவதானம்: நில்வள கங்கையில் இரு பகுதிகளில் வெள்ள அபாயம் | Nilwala Ganga Miner Flood Warning

மேலும், களனி கங்கை ஆற்றின் கெஹல்கமு ஓயா, களு கங்கை ஆற்றின் இரத்தினபுரி பகுதி மற்றும் குடா கங்கை ஆற்றின் மில்லகண்ட பகுதி ஆகிய இடங்களில் எச்சரிக்கை நிலை பதிவாகியுள்ளது.

எனினும், இந்த இடங்களில் நீர்மட்டம் குறைந்து வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாவலி கங்கை உள்ளிட்ட ஏனைய முக்கிய ஆறுகளின் பெரும்பாலான கண்காணிப்பு நிலையங்களில் நீர்மட்டம் வழமையான நிலையில் காணப்படுகின்றது. ஆறுகளின் நீர்மட்டத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.