ஞானசார தேரருக்கு சட்டத்தை மீறி எந்த முடிவையும் எடுக்க ஜனாதிபதி தயாரில்லை - அரசதரப்பு

ஞானசார தேரருக்கு சட்டத்தை மீறி எந்த முடிவையும் எடுக்க ஜனாதிபதி தயாரில்லை - அரசதரப்பு

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்படமாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சட்டத்தை மீறியோ அல்லது எந்தவொரு குழுவினரின் அழுத்தத்திற்கும் அடிபணிந்தோ ஜனாதிபதி தீர்மானங்களை எடுக்கமாட்டார் என அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக Sunday times பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஞானசார தேரர் இரண்டு வழக்குகளில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக மேலும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அரசாங்கத் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

“சட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய இடம் நீதிமன்றமே தவிர, அதற்கு வெளியே அல்ல” என அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல் வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த தேரருக்கு பொதுவான மன்னிப்பு வழங்குவது, இதேபோன்ற சூழ்நிலைகளில் உள்ள ஏனையவர்களும் மன்னிப்பு கோருவதற்கு முன்னுதாரணமாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.