கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொ*லை

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொ*லை

கொத்மலை, வெதமுல்ல – வில்லீஸ் லேன்ட் தோட்டத்தில் நேற்று (15) இரவு இளைஞர் ஒருவர் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

கண்டி – நுவரெலியா பிரதான வீதியில், வெதமுல்ல சந்திக்கு அருகாமையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தாக்குதலுக்கு உள்ளான நிலையில் காணப்பட்ட இளைஞரை அவதானித்த பொதுமக்கள், அவசர அம்புலன்ஸ் சேவையான 1990க்கு தகவல் வழங்கியுள்ளனர். 

இதனையடுத்து, அம்புலன்ஸ் மூலம் அவர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் வெதமுல்ல – வில்லீஸ் லேன்ட் தோட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரம்பொட மற்றும் நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.