பல கோடியை தாண்டிய பயனாளர்களின் எண்ணிக்கை

பல கோடியை தாண்டிய பயனாளர்களின் எண்ணிக்கை

கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு(AI) பிரிவின் தலைமை பொறுப்புகளில் பெரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு பிரிவில் கூகுள் நிறுவனம் முதன்மையாக தொடர்ந்தும் திகழ வேண்டும் என்று அதிநவீன தொழில்நுட்பங்களை விரிவு படுத்தி வருகிறது.

அதே நேரம் கூகுள் நிறுவனத்தின் உயர் பதவிகளிலும், பொறுப்புகளிலும் பெரும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கூகுள் CEO சுந்தர் பிச்சை தங்களுடைய ஊழியர்களுக்கு அறியப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலியான Gemini AI பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 95 கோடியை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திறந்த மூலக் குறியீடு கொண்ட Gamma மாடல்கள் இதுவரை 90 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.