கூகுலின் புதிய AI முகவர் அறிமுகம்

கூகுலின் புதிய AI முகவர் அறிமுகம்

கூகுள் நிறுவனம், பயனர்களின் அன்றாட பணிகளை தானாகச் செய்து முடிக்கும் 'Gemini Spark' என்ற புதிய செயற்கை நுண்ணறிவு (AI) முகவரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வழக்கமான AI Chatbot-ஐ விட மேம்பட்டதாக செயற்பட்டு, பயனர் வழங்கும் பணிகளை பின்னணியில் தொடர்ந்து செய்து முடிக்கும் திறன் கொண்டது.

Gemini Spark, Gmail, Google Docs, Sheets, Calendar உள்ளிட்ட Google Workspace சேவைகளுடன் நேரடியாக இணைந்து செயற்படும். மின்னஞ்சல்களை ஆய்வு செய்வது, ஆவணங்களைத் தயாரிப்பது, திட்டங்களை நிர்வகிப்பது, நிகழ்வுகளைத் திட்டமிடுவது போன்ற பல்வேறு பணிகளை பயனரின் சார்பில் மேற்கொள்ள முடியும். சாதனம் அணைக்கப்பட்டிருந்தாலும் அல்லது இணையத்தில் நேரடியாக பயன்படுத்தப்படாவிட்டாலும், Google Cloud மூலம் பின்னணியில் தொடர்ந்து இயங்கும் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது Google AI Pro மற்றும் Ultra சந்தாதாரர்களுக்கு மட்டுமே இந்த சேவை படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் AI தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை மேலும் விரிவுபடுத்தும் முக்கிய முன்னேற்றமாக Gemini Spark கருதப்படுகிறது.