நாளை நிலவில் மோதப்போகும் SpaceX ராக்கெட்

நாளை நிலவில் மோதப்போகும் SpaceX ராக்கெட்

இது விபத்து இல்ல, அறிவியலுக்கு கிடைக்கப்போகும் பெரிய வாய்ப்பு!

கடந்த 2025 ஜனவரியில் இரண்டு தனியார் நிலவு லேண்டர்களை கொண்டு சென்ற SpaceX Falcon 9 ராக்கெட்டின் மேல் பகுதி, ஒரு வருஷத்துக்கும் மேலாக பூமி - நிலவை சுற்றி கட்டுப்பாடில்லாமல் சுற்றி வந்துச்சு.

அது நாளை ஆகஸ்ட் 5, 2026 அன்று நிலவில் உள்ள Einstein Crater பகுதிக்கு அருகில் மணிக்கு சுமார் 8,700 கி.மீ வேகத்தில் மோதும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இந்த மோதலால் நிலவில் சுமார் 27 மீட்டர் அகலத்திற்கு புதிய பள்ளம் உருவாகும், பெரிய அளவில் தூசி மேகம் எழும்பும். இது நிலவுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது.

ஆனால் விஞ்ஞானிகள் இந்த தூசி மேகத்தை பூமியில் இருந்து தொலைநோக்கிகள் மூலமும், நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர்கள் மூலமும் கவனிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஏன்னா, நிலவில் தூசி எப்படி பரவுகிறது என்பதை புரிந்துகொண்டால், எதிர்காலத்தில் நிலவுக்கு செல்லும் வீரர்களையும், அங்கு அமைக்கப்படும் தளங்களையும், உபகரணங்களையும் பாதுகாக்க இது பெரிதும் உதவும்.