உங்க வெப்சைட் டேட்டாவை ஏ.ஐ-க்கு யூஸ் பண்ண போறாங்களா? சர்ச்சையில் மெட்டாவின் புது விதிமுறை

உங்க வெப்சைட் டேட்டாவை ஏ.ஐ-க்கு யூஸ் பண்ண போறாங்களா? சர்ச்சையில் மெட்டாவின் புது விதிமுறை

இது எதுக்குமே யூசர்கள்கிட்ட இருந்து முறையான அனுமதி (Consent) வாங்குறது இல்ல. போன வருஷம் ஒரு பெரிய காப்பிரைட் கேஸ்ல இருந்து மெட்டா தப்பிச்சிருந்தாலும், இன்னும் பல வழக்குகள் அவங்க மேல நிலுவையில தான் இருக்கு.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் முன்னணி பெற உலகளவில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கிப் பின்வாங்கியுள்ளது.

தனது ஏ.ஐ மாடல்களுக்குப் பயிற்சி அளிக்க இணையதளங்களில் உள்ள தகவல்களைக் கட்டுப்பாடின்றிச் சேகரிக்க (Data Scraping) வழிவகுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த புதிய பயன்பாட்டு விதியை, வல்லுநர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து மெட்டா நிறுவனம் தற்போது ரத்து செய்துள்ளது.

ஆங்கிலத்தில் வாசிக்க

அக்டோபர் 17 சனிக்கிழமையன்று, மெட்டா தனது வணிகப் பயன்பாட்டு விதிமுறைகளில் (Commercial Terms) சமீபத்தில் சேர்த்திருந்த ஒரு முக்கியப் பிரிவை நீக்கியுள்ளது.

அந்த விதியில், "மெட்டா வணிகக் கணக்குடன் (Meta Business Account) இணைக்கப்பட்ட செய்தித்தளங்கள் மற்றும் பல்வேறு இணையதளங்களில் உள்ள தகவல்கள், படங்களை மெட்டாவின் AI தயாரிப்புகளுக்குப் பயிற்சி அளிக்கவும், ஆராய்ச்சி செய்யவும், சேவைகளை மேம்படுத்தவும் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

'தி வெர்ஜ்' (The Verge) செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த விதிமுறை தற்போது மெட்டாவின் அதிகாரப்பூர்வ பக்கத்திலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டிய ஆபத்து

கார்னெல் பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியர் ஜேம்ஸ் கிரிம்மல்மேன் மற்றும் 'நீமன் லேப்' (Nieman Lab) அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த புதிய விதியை முதன்முதலில் சுட்டிக்காட்டினர்.

அவர்கள் கூறுகையில், "இந்த புதிய விதியின் மூலம், இணையதள உரிமையாளர்களுக்கு எந்தக் கட்டணமும் தராமல் அவர்களின் தகவல்களை மெட்டா இலவசமாக AI பயிற்சிக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், தரவுகளை எடுக்கக் கூடாது என இணையதள உரிமையாளர்கள் வைக்கும் 'robots.txt' என்ற பாதுகாப்பு அமைப்பைக் கூட இந்த விதி மீறிவிடும்" என்று எச்சரித்தனர்

தற்போது முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் இணையத்தில் கிடைக்கும் பதிப்புரிமை பெற்ற தகவல்களைத் தங்களின் ஏ.ஐ மாடல்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பிரைவசிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

எலான் மஸ்க்கின் 'xAI' நிறுவனம், தனது 'Grok' AI சாட்பாட்டைப் பயிற்றுவிக்க எக்ஸ் தளத்தில் உள்ள பப்ளிக் போஸ்ட்களைப் பயன்படுத்துகிறது.

மெட்டா நிறுவனம் 18 வயதுக்கு மேற்பட்ட தனது பயனர்களின் பப்ளிக் போஸ்ட்களை ஏ.ஐ பயிற்சிக்குப் பயன்படுத்தி வருகிறது.

இவை இரண்டிலுமே பயனர்களிடம் இருந்து நேரடி அனுமதி பெறப்படுவதில்லை. மெட்டா மீது தொடரப்பட்ட காப்புரிமை வழக்கு ஒன்றில் கடந்த ஆண்டு அந்நிறுவனம் வெற்றி பெற்றபோதிலும், அதுபோன்ற வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய மெட்டாவின் செய்தித் தொடர்பாளர், "நாங்கள் இணையதளங்களிலிருந்து தரவுகளைச் சேகரிக்கும் முறையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இந்த விதிமுறைகள் எங்கள் விளம்பரம் மற்றும் வணிகப் தயாரிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். செய்தித் தளங்களின் தரவுகளை எடுப்பதற்காக இது கொண்டுவரப்படவில்லை. இணையதள உரிமையாளர்கள் 'robots.txt' மூலம் தெரிவிக்கும் விருப்பங்களை நாங்கள் எப்போதும் மதிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல, மெட்டாவின் தகவல் தொடர்புத் துறை துணைத் தலைவர் ஆண்டி ஸ்டோன் கூறுகையில், "நாங்கள் இணையத் தரவுகளைச் சேகரிக்கும் முறையில் எந்த மாற்றமும் இல்லை; இதற்கு மாறாகக் கூறப்படும் தகவல்கள் தவறானவை" என்றார்.

தொடரும் டெக் நிறுவனங்களின் தந்திரம்

தொழில்நுட்ப நிறுவனங்கள் யாருக்கும் தெரியாமல் தனியுரிமைக் கொள்கைகளை மாற்றி, பயனர் தரவுகளை ஏ.ஐ பயிற்சிக்குப் பயன்படுத்த முயல்வது இது முதன்முறையல்ல.

கடந்த ஜூலை 2025-இல், 'வீடிரான்ஸ்ஃபர்' (WeTransfer) நிறுவனம், பயனர்கள் பதிவேற்றும் கோப்புகளைத் தங்களின் மெஷின் லேர்னிங் மாடல்களை மேம்படுத்தப் போவதாக அறிவித்தது. பயனர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, அந்த விதியை வீடிரான்ஸ்ஃபர் அவசர அவசரமாக நீக்கியது குறிப்பிடத்தக்கது.