இன்ஸ்டாகிராமில் வரும் புதிய வசதி

இன்ஸ்டாகிராமில் வரும் புதிய வசதி

சமூக வலைத்தளங்களில் உலகளவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் (Instagram) உள்ளது.  

ஆரம்பத்தில் புகைப்படங்களை மட்டும் பதிவேற்றம் செய்யும் செயலியாக இருந்த இன்ஸ்டாகிராம், நாளடைவில் காணொளிகளைப் (Video) பதிவேற்றும் வசதியையும் கொண்டு வந்தது. குறிப்பாக, 'டிக் டாக்' தடைக்குத் பிறகு இன்ஸ்டாகிராமில் அறிமுகமான 'ரீல்ஸ்' (Reels) வசதி பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பயனர்களைக் கவர்வதற்காக அவ்வப்போது புதிய அம்சங்களை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டோரியைப் (Story) பதிவிட்ட பிறகும், அதில் திருத்தங்களை மேற்கொள்ளக்கூடிய புதிய அம்சம் விரைவில் அறிமுகமாகவுள்ளது.

தற்போதுள்ள நடைமுறையின்படி, இன்ஸ்டா ஸ்டோரியில் ஏதேனும் எழுத்துப்பிழை, தவறான டேக் (Tag) அல்லது ஸ்டிக்கர் (Sticker) இருந்தால், அந்த ஸ்டோரியை முழுமையாக நீக்கிவிட்டு (Delete) மீண்டும் முதலிலிருந்து பதிவேற்ற வேண்டும். ஆனால், புதிய ‘எடிட் ஸ்டோரி’ (Edit Story) அம்சத்தின் மூலம், பதிவிட்ட பிறகும் நேரடியாகத் திருத்தங்களைச் செய்ய முடியும். இந்த அம்சம் தற்போது சில ஐபோன் (iOS) பயனர்களிடம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல், வாட்ஸ்அப் (WhatsApp) செயலியிலும் இன்ஸ்டாகிராமின் ‘நெருங்கிய நண்பர்கள்’ (Close Friends) அம்சத்தைப் போன்ற புதிய தனியுரிமை (Privacy) வசதி வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் குடும்பம், நண்பர்கள், அலுவலகம் எனத் தனித்தனிப் பட்டியல்களை உருவாக்கி, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தங்களின் ஸ்டேட்டஸை (Status) பகிர்ந்துகொள்ள முடியும். தற்போது இந்த அம்சமும் பீட்டா (Beta) பயனர்களிடம் சோதனையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.