இந்தியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் 5.7 மெக்னிடியூட் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று (19) காலை 11:51 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நில நடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் 171 கிலோ மீற்றர் ஆழத்தில் இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.