வவுனியா உயர்தர மாணவனுக்கு நேர்ந்த துயரம்
வவுனியா மயிலங்குளம் குளத்தில் 4 மாணவ நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கச் சென்ற 18 வயதான மாணவன் நீரில் மூழ்கிப் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை இந்த தியர சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மாணவன் வவுனியா கோயில் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் வவுனியா இந்துக்கல்லுாரி 2026ம் ஆண்டு ஏ.எல் பிரிவு மாணவன் என தெரியவருகின்றது.

உடல் மேலதிக பரிசோதனைக்காக வவுனியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக வவுனியாப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.