யாழில் டெங்கு பரவும் சூழல் - ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் தண்டம்

யாழில் டெங்கு பரவும் சூழல் - ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் டெங்கு நுளம்பு பெருக கூடிய சூழலை பேணிய ஆதான உரிமையாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பருத்தித்துறை நகரசபை, அல்வாய் மற்றும் புலோலி பிரதேசங்களில் கடந்த வாரம் டெங்கு கட்டுப்பாட்டு களவிஐயம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது நுளம்பு பெருகக் கூடியவாறான சூழலினை வைத்திருந்த பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட 10 குடியிருப்பாளர்களிற்கும் அல்வாய் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் 05 குடியிருப்பாளகள்.

மற்றும், புலோலி பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் 07 குடியிருப்பாளரிற்கும் எதிராக நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரான ப. தினேஷ், அல்வாய் மற்றும் புலோலி பொதுச்சுகாதார பரிசோதகர் க.கிருஸ்ணரட்சகன் என்பவர்களால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

யாழில் டெங்கு பரவும் சூழல் - ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் தண்டம் | Dengue Case In Point Pedro One Lakh Rupees Fineஇந்நிலையில், குறித்த வழக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குற்றஞ்சாட்டப்பட்ட அனைத்து ஆதன உரிமையாளர்களும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் மன்றினால் ஆதன உரிமையாளர்களிற்கு தலா 5,000 தண்டப்பணம் வீதம் 110,000 தண்டப்பணம் அறவிடப்பட்டது.