யாழில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் காவல்துறையினரால் கைது

யாழில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் காவல்துறையினரால் கைது

யாழில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் இன்று அதிகாலை சுன்னாகம் காவல்துறையினரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தே கநபர்கள் இருவரும் டீசலை பதுக்கி வைத்திருப்பதாக சுன்னாகம் காவல்துறை பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அவர்களிடமிருந்து 800 லீட்டர் டீசல், டீசலை பதுக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் காவல்துறையினரால் கைது | Arrest Two People For Hoarding Diesel In Jaffnaகைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினரால் மேற்கொண்டு வருகின்றனர்.