வடக்கு கிழக்கில் தோற்றவர்கள் மீண்டு வந்தது எப்படி?
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் கடந்த தேர்தல்களில் தோல்வியைத் தழுவியவர்களை இம்முறை வெற்றிபெற வைத்துள்ளனர் தமிழ் மக்கள்.
கடந்த ஐந்து வருடங்களாக எம்.பிக்களாக இருந்த பெருமளவான பழையவர்களுக்கு மாற்றீடாகவே இவர்களை பாராளுமன்றுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதன்படி யாழ் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் இம்முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அங்கயன் இராமநாதன் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்விகண்ட நிலையில் தேசியப்பட்டியல் ஊடாக எம்.பி.யானவர்.
அதேபோன்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் இம்முறை போயிடியிட்டு வெற்றிபெற்றுள்ள கஜேந்திர குமார் பொன்னம்பலம் கடந்த முறை தேர்தலில் தோல்விகண்டிருந்ததுடன் அதற்கு முதல் எம்.பி.யாக இருந்தவர்.
வன்னி மாவட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பில் இம்முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவரான வினோநோதராதலிங்கம் கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டவர். இவரும் இதற்கு முன்னர் எம்.பி.யாக இருந்தவர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை தமிழ் தேசியக்கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரான கோவிந்தம் கருணாகரம் கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டவர். இவரும் முன்னாள் எம்.பி.யாக இருந்தவர்.