தலைவணங்க வைக்கும் நாவலப்பிட்டி இளைஞர்கள்... உண்மையான ஹீரோக்கள் நீங்கள்!
சில நேரங்களில் மனிதர்களாக பிறந்ததன் அர்த்தத்தை சிலர்தான் உணர்த்துவார்கள். இன்று அந்தப் பெருமையை நாவலப்பிட்டி இளைஞர்கள் பெற்றிருக்கிறார்கள். 
வெள்ளநீரில் சிக்கி உயிர் அச்சத்தில் தவித்த பேருந்து பயணிகளை, தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்ற ஓடிச் சென்ற உங்களின் துணிச்சலுக்கு என் மனமார்ந்த வணக்கங்கள். 
"பயப்படாதீர்கள்... எல்லோரையும் பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறோம்" என்ற உங்கள் வார்த்தைகள் பலருக்கு நம்பிக்கையையும் உயிரையும் கொடுத்தது.
இந்த உலகம் இன்னும் மனிதநேயத்தால் வாழ்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளீர்கள். உங்களைப் போன்ற இளைஞர்களே இந்த சமூகத்தின் உண்மையான பலம்.
நாவலப்பிட்டி இளைஞர்களே... உங்கள் வீரச் செயலுக்கு என் இதயப்பூர்வமான பாராட்டுகளும், தலைவணங்கும் மரியாதையும்! நீங்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்க இறைவனை வேண்டுகிறேன். 