
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெருந்தொகையான கடல் அட்டைகள்
இலங்கைக்கு கடத்துவதற்கு திட்டமிட்டிருந்த ஒரு தொகை கடல் அட்டைகளை தமிழகம் - ராமநாதபுரம் பகுதியில் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ராமநாதபுரம் சக்கரக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் நேற்று (04.10.2025) இரவு 250 கிலோகிராம் கடல் அட்டைகள் பதப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகள் சுமார் 10 இலட்சம் இந்திய ரூபாய் பெறுமதியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.