மக்கள் புடைசூழ தேரில் வலம் வந்த வல்லிபுர ஆழ்வார்

மக்கள் புடைசூழ தேரில் வலம் வந்த வல்லிபுர ஆழ்வார்

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின்  தேர் திருவிழா பக்தர்கள் புடைசூழ இன்று சிறப்பாக இடம்பெற்றது.

கணபதீஸ்வரக் குருக்கள் தலமையிலான சிவாச்சாரியார்கள் சிறப்பு கிரகங்களை மேற்கொண்டு காலை 7:30 மணியளவில் வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்றன. அதனைத்  தொடர்ந்து  9:30 மணியளவில் வல்லிபுர ஆழ்வார் தேரில் ஏறி உலா வந்தார்.

முன்னே  ஆஞ்சநேயப்பெருமான் செல்ல பின்னே விநாயகப்பெருமானும், லக்ஷ்மி தேவியை தொடர்ந்து வல்லிபுரத்து சக்கரத்து ஆழ்வார் வலம் வந்தார்.

இன்றைய தேரத்திருவிழாவில் அடியவர்கள் அங்க பிரதட்டை, பால் காவடி, செடில்காவடி, தீச்சட்டி உட்பட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஆழ்வாரின் தேர் பவனிக் காட்சி பக்தர்களைப் பரவசமடைய வைத்துள்ளது. 

இதேவேளை நாளை சமுத்திர திருவிழாவிற்க்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.