புங்குடுதீவு - குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

புங்குடுதீவு - குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு  குறிகாட்டுவான் இறங்கு துறைக்கான  புனரமைப்புப் பணிகள் 04.10.2025 ஆரம்பிக்கப்பட்டன. 

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள்  சிவில் விமான சேவைகள் அமைச்சின் 299 மில்லியன்  நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. 

மிக நீண்ட காலமாக தீவக மக்கள் துறைமுகம் புனரமைக்கப்படாததால் பல்வேறு அசெளகரிகங்களை எதிர்நோக்கி வந்தனர்.  தற்போது துறைமுகம் புனரமைப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளதால் கடல் கடந்த தீவுகளான நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு போன்ற தீவகப் பகுதிகளுக்கு செல்லும் கடல் பயணிகள் மற்றும் உல்லாச பயணிகளுக்கு இலகுவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

அத்தோடு இன்றைய நிகழ்வில் நெடுந்தீவு பகுதிக்கான நீண்ட காலப் பிரச்சினையாக காணப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான ஒப்பந்தமும் நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்துடன் பொற்றொலிய கூட்டத்தாபனத்தால்  அமைச்சர்கள் முன்னிலையில் செய்து கொள்ளப்பட்டது

நீண்ட காலமாக தீவக மீனவர்களின் கடல் உணவுகளை சந்தைப்படுத்துவதற்காக புங்குடுதீவு  குறிகட்டுவான் கரைக்கு கொண்டு வந்து அதனை வாகனங்களில் ஏற்றுவதற்கு மீனவர்கள் பல்வேறு அசெளகரியங்களை மீனவர்கள் எதிர் நோக்கினர். 

இவ்விடயத்தை மீனவர்கள் தெரியப்படுத்தியதற்கு இணங்க மீனவர்களுடைய படகுகளை கரைக்கு சேர்த்து கடலுணவுகளை கரைக்கு கொண்டு வந்து ஏற்றுவதற்கு உரிய இடங்களை தெரிவு செய்து அதனை எதிர்காலத்தில் அமைப்பதற்கான கள ஆய்விலும் அமைச்சர்கள் நேற்று ஈடுபட்டனர். 

நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள்  சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்  நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், வேலணை மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், வடக்கு மாகாணப் பணிப்பாளர், மாவட்ட பொறியியலாளர்கள், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், நெடுந்தீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினர்  எனப்பலரும் கலந்து கொண்டனர்.